Monday, December 1, 2008

தொலை தூர நட்சத்திரம்.......







அலையுண்ட படகாய்…

தத்தளிக்கிறேன் .....தனிமையில் ..….

எத்தனை நேரம் தான் எதிர் நீச்சல் போட முடியும்..

ஷக்தி கொடு என்று என் ஷக்தியை வேண்டுகிறேன்…


எனக்கு என்றுமே அவள் தான்…

அவளை விட்டால் வேறு நாதியில்லை ….


இந்த வெளிச்சம் இன்னும் கொஞ்சம் நீடிக்காதா …

என் கூடு.. உயிர் தாங்கும் வரையாவது ..

ஒரே ஒரு முறை உன்னை பார்த்துவிட ...

அதுவரைக்குமாவது என்னுயிர் தாங்க ..

எனக்கு ஷக்தி கொடு …


அது உன்னால் மட்டும் தான் முடியும் …

அது உனக்கும் நன்றாகத் தெரியும் என்று

எனக்குத் தெரியும்


இந்த கடலில் நான் இறங்கியிருக்கவே கூடாது …

அவளவு கொடுமைகள் நிறைந்த கடல் இது …


ஆனால் …


இந்த கடலிலே தானே உன்னையும் சந்திதேன் …

நீ மட்டும் எப்பிடி இங்கே தனியா இருந்தாய் …


எனக்கு எப்போது நீந்த தெரிந்தது??

அடடா நானும் நீந்துகிறேனே …


எந்த இருட்டிலும் உன் வெளிச்சம் எனக்கு தெரிந்து விடும் ……

நான் நம்புகிறேன் ….

அது தான் என் நமிக்கை …

அதை தேடி நீந்தலானேன் …


அதோ!!!!!!!!!!!


தெரிகிறது …

ஆம் அதுதான் …

அதுவே தான் …

என்னால் உணர முடிகிறது …

அது வெறும் ஒளி அல்ல …

நான் செல்ல அடைய வேண்டிய இலக்கு …

என் பயணத்தின் முற்றுபுள்ளி

ஆனால் …அது எவளவு தூரத்தில் இருக்கிறதோ …


என்னால் அடைய முடியுமா …????


என்னால் முடியும் என்று நீதானே சொன்னாய் …


நீ சொன்னதுபோல உன்னை நோக்கிய …

எல்லா திசைகளிலும் ஓடுகிறேன் ..…


நான் அக்கரை சேர்வதற்காகவே இந்த ஆழ் கழலில் இறக்கப்பட்டேன் ..

என்பதை அடிக்கடி கூறிக்கொள்கிறேன் …

எனக்கான உன்னை சேரும் வரை

என் பயணம் தொடரட்டும் ..


அந்த வெளிச்சம் கூடிகொண்டே செல்கிறதே !!!!!!!!!!!

நான் உன்னை நெருங்கிவிடேனா ???


ஆம் என்று சொல்லு …

என் உடலுக்கு இந்த உயிரை தாங்கி சலிக்க முனனர் ..


காலச்சுழற்சியில் .…

நரை கண்டு மார் நிலம் நோக்கிடு முன் ..…

என்னை ஏற்றுகொள் …


உன் மடியிலாவது என் இறுதி கணங்கள் கழியட்டும் …

அந்த வரமாவது கிடைக்காதா ???


என் கால்கள் வலி காண்பதில்லை

கண்கள் கூர்மை இழப்பதில்லை ….


உன் தரிசனம் பெறுவது நிதர்சனம் …

அந்த நச்சத்திரம் மட்டும் இப்பொழுதும் அங்கேயே …

எனது நம்பிக்கையாக......


என் ஷக்தியுடன் எனை சேற்பதட்காத…


ஆம் ..அவள் அங்கே தான் இருகிறாள் …

எனக்ககா….


உயிரே சற்று பொறுமை கொள்

நான் என்னவளை நெருங்கிவிட்டேன் …


-- பக்தன் --


16 comments:

புதியவன் said...

வருக வருக வலையுலகிற்கு
தருக தருக பல அரிய படைப்புகளைத் தருக.

தயவு செய்து வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்து விடுங்களேன். கமெண்ட் போடுவதற்கு சுலபமாய் இருக்கும்...

நட்புடன் ஜமால் said...

\\உன்மடியிலவது என் இறுதி கணங்கள் கழியட்டும் …

அந்த வரமாவது கிடைக்காதா ???\\

ஆஹா முதல் ஷாட்டே சிக்ஸரா.

ம்ம்ம்... அருமை. வாழ்த்துக்கள்

---------------------

எழுத்து பிழைகளை கொஞ்சம் கவணியுங்கள்

Karthik Krishna said...

அன்பின் புதியவன்...
word varification ஐ எங்கே சென்று set செய்ய முடியும்???

is it in the setting menu??
தயவுடன் வழிகாட்ட முடியுமா?
ooooopsssss
நானும் முயற்சிக்கிறேன்...

மிக்க நன்றி....

Poornima Saravana kumar said...

வாழ்த்துக்கள்..
முதல் பதிவே கவிதையா?
தொடரட்டும் உங்கள் கவிதைகள் இனிமையாய்..

// அதிரை ஜமால் said
எழுத்து பிழைகளை கொஞ்சம் கவணியுங்கள்
//

கவனிக்கவும்..

Karthik Krishna said...

அதிரை ஜமால்...

மிக்க மிக்க நன்றிகள்...
எனக்கு கிடைத்த முதல் ஊக்கம்...

மீண்டும் நன்றிகள் ஜமால்...

அன்புடன்....
-கார்த்திக்-

Karthik Krishna said...

பூர்ணிமா....

மிக்க நன்றி....

ஆம் அன்பர் ஜமால் சொன்னது போல
என் அடுத்த பதிவுகளில் நான் எழுத்து பிழைகளை கவனிக்கிறேன்....

நன்றிகள்...

அன்புடன்
-கார்த்திக்-

Poornima Saravana kumar said...

go to ---settings
select--- comments(sub title)
in display
Show word verification for comments? Yes or No..
select no..

Karthik Krishna said...

மிக்க நன்றி பூர்ணிமா.....

சரி செய்துவிடேன்....

ஹ ஹ ஹா......

நன்றிகள்.........

Poornima Saravana kumar said...

super..

நட்புடன் ஜமால் said...

\\ Karthik Krishna said...
பூர்ணிமா....

மிக்க நன்றி....

ஆம் அன்பர் ஜமால் சொன்னது போல
என் அடுத்த பதிவுகளில் நான் எழுத்து பிழைகளை கவனிக்கிறேன்....

நன்றிகள்...

அன்புடன்
-கார்த்திக்-\\

அன்பரே இதே பதிவையும் நீங்கள் திருத்தம் செய்து வெளியிடலாம்.

http://www.blogger.com/home

இங்கே செல்லுங்கள் (நீங்கள் login செய்திருக்க வேண்டும்).

அந்த பக்கத்தில் ”Edit Posts” என்று இருக்கும் அதை கிளிக்கினால் பிறகு நீங்கள் திருத்தங்கள் செய்து மீண்டும் வெளியிடலாம்.
ஏற்கனவே உள்ள பின்னூட்டங்கள் அப்படியே இருக்கும்.

Anonymous said...
This comment has been removed by the author.
Karthik Krishna said...

மிக்க நன்றி ஜமால்....

நான் திருத்தம் செய்து மீள் அளிப்பு செய்கிறேன்....

நீங்க்ள் கொடுக்கும் ஊக்கம்
என்னை தட்டி கொடுக்கின்ற்து...

என் அன்பான நன்றிகள்....

அன்புடன்
- கார்த்திக் -

Karthik Krishna said...
This comment has been removed by the author.
Divya said...

All the very best ......keep blogging!!

Anonymous said...
This comment has been removed by the author.
Karthik Krishna said...

மது...
உங்கள் நட்ச்சதிரம் உங்களை விட்டு எங்கே போய்விடும்?

எங்கு தான் போகமுடியும் அதனால்?

கவலை வேண்டாம்...

அது எப்பொழுதும் உங்களுடன் தான்..

திரையிடும் மேகங்கள் விலகட்டும்..
அது பிரகாசிக்க...
பிரார்த்திப்போம்...

என்றும் உங்கள்,
-கார்த்திக்-