Tuesday, December 2, 2008

என் குட்டி தேவதை.....


அந்த கண்களை என் உயிர்போகும் வரை என்னால் மறக்க முடியாது...
அதிலே அப்பிடி ஒரு காந்த சக்தி.....

அவளிடமே வரம் கேட்டேன் ...
உன்னை வாழும் நாட்கள் முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று..

எதற்குத்தான் நீ மறுத்திருக்கிறாய்???

எப்போதும் போல அதே அந்த ஸ்ருங்கார புனைகை ....
உனக்கு அதை தவிர வேறு என்னதான் தெரியும்...


நீ என்னை சித்திரவதை செய்யும் கணங்கள் ....
நான் என்னை தொலைக்கிற பொன்னான தருணங்கள்...
இந்த உலகை மறந்திருக்கும் பொழுதுகள்...

உன்னை எத்தனை தடவை கிள்ளியிருபேன் என்று
உன் அம்மாவுக்கு தெரியாது ...

அவளவு ரீங்காரமடீ உன் அழுகை...
அவற்றை எதற்காக நான் தவற விடவேணும் ....

இப்ப உனக்கு ..
நினைவிருந்தால் மன்னித்துவிடு...

நீ அந்த பொம்மைக்கு குளிப்பாட்டி
அதனை உன்னுடனே வைத்துக்கொண்டு தூங்கும் அழகு....
அந்த குட்டியின் தாய் பொம்மை பார்த்திருந்தால்...
உனக்கு கோடி நன்றி சொல்லியிருக்கும்...


நீ பள்ளி செல்லும் நாட்கள்......
உன் சப்பாத்தை அப்பாவின் தட்டிலேதான் வைப்பேன் என்று.....
பள்ளியிலிருந்து வீடு வந்தவுடனேயே....
ஒவொரு தடவையும் அதனை தூக்கிக்கொண்டு
சமயலறைக்கு அம்மாவை தேடி போவாயே....
அது உனக்கே உனக்கான சிங்கார நடை..
எனக்கு நாள்தோறும் உன் வீதிஉலா...

நான் கேட்கும் கேழ்விகளுக்கு விடை தேட முயலுவாயே....
நான் அடுத்த கேழ்வி தேடுவேன்....
உன் முகதை அப்படியே வைத்து ரசிப்பதற்கு...

நீ தூங்கிவிட்டால்....எங்களுக்கு இரவாகிவிடும்...
நீ தான் எங்கள் வீட்டு இதயத்துடிப்பு....


நீ தான் எங்களுக்கு எல்லாமே....
உனக்கு முகவரி உன் புன்னகை...
அதுதான் எங்களுக்கும் இன்னிசை...


நீ இப்படியே இருந்துவிட இறைவனை வேண்டுகிறேன்...
உன் முகவரியை தொலைக்காமல்....

- உன் அண்ணா -

11 comments:

Anonymous said...

Great one!
Try this website to type in Tamil!
Good luck dude on your great work!!!

:)

-Mathu

Anonymous said...

This is the website!
;-)

http://type.tamil.net/

புதியவன் said...

ஆஹா...அருமையான ஒரு சகோதர பாசம் சொல்லும் கவிதை தேர்ந்தெடுத்த வார்த்தைகள்.
நல்லா இருக்கு கார்த்திக் கிருஷ்ணா.

சில எழுத்துப் பிழைகள் உள்ளன. இது முதலில் எல்லோருக்கும் டைப் செய்யும் போது வரக்கூடிய ஒன்று தான். கொஞ்சம் கவனம் மாக இருந்தால் சரியாகிவிடும்.

//ஸ்ருங்கார புனைகை ....//

ஸ்ருங்கார புன்னகை ....

//உன்னை எத்தனை தடவை கிள்ளியிருபேன் //

உன்னை எத்தனை தடவை கிள்ளியிருப்பேன்

//நான் கேட்கும் கேழ்விகளுக்கு விடை தேட முயலுவாயே....
நான் அடுத்த கேழ்வி தேடுவேன்....
உன் முகதை அப்படியே வைத்து ரசிப்பதற்கு...//

நான் கேட்கும் கேள்விகளுக்கு விடை தேட முயலுவாயே....
நான் அடுத்த கேள்வி தேடுவேன்....
உன் முகதை அப்படியே வைத்து ரசிப்பதற்கு...

இவற்றை சரி செய்து விடுங்கள்

மற்ற படி

//நீ அந்த பொம்மைக்கு குளிப்பாட்டி
அதனை உன்னுடனே வைத்துக்கொண்டு தூங்கும் அழகு....
அந்த குட்டியின் தாய் பொம்மை பார்த்திருந்தால்...
உனக்கு கோடி நன்றி சொல்லியிருக்கும்...//

//நீ தூங்கிவிட்டால்....எங்களுக்கு இரவாகிவிடும்...
நீ தான் எங்கள் வீட்டு இதயத்துடிப்பு....


நீ தான் எங்களுக்கு எல்லாமே....
உனக்கு முகவரி உன் புன்னகை...
அதுதான் எங்களுக்கும் இன்னிசை...//

ஆழமான பாசம் சொல்லும் அழகான வரிகள்.
உங்களிடம் நல்ல வார்த்தை வளம் இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

அதிரை ஜமால் said...

\\நீ தூங்கிவிட்டால்....எங்களுக்கு இரவாகிவிடும்...\\

நீ விழித்திருந்தால் இரவெல்லாம் பகலாகும்.

\\நீ தான் எங்கள் வீட்டு இதயத்துடிப்பு....\\

நீ அருகில் இல்லாவிட்டால் துடித்து போய்விடுவோம் உன் இதய்த்துடிப்பு கேளாமல்


களக்கல்ஸ் ... அருமையான வரிகள்.

அதிரை ஜமால் said...

\\நீ அந்த பொம்மைக்கு குளிப்பாட்டி
அதனை உன்னுடனே வைத்துக்கொண்டு தூங்கும் அழகு....
அந்த குட்டியின் தாய் பொம்மை பார்த்திருந்தால்...
உனக்கு கோடி நன்றி சொல்லியிருக்கும்...\\

ஆஹா அழகான வரிகள்

Karthik Krishna said...

ஜமால்....

மிக்க நன்றி உங்களுக்கு.....
உங்கள் பாராட்டுகளுக்கு,

எழுதுகிறேன் இன்னும்...
உங்கள் கருத்துகளோடு.....

மீண்டும் என் நன்றிகள்....

அன்புடன்
- கார்த்திக் _

Karthik Krishna said...

அன்பின் புதியவன்....

உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்....

ஆம்...
இன்னும் கணிணி எழுத்துக்கள் பரீச்சயமாகவில்லை......

உங்கள் வழிகாட்டல் என்க்கு உற்சாகத்தை அழிக்கிறது...

அன்புடன்
- கார்த்திக் -

PoornimaSaran said...

//
உன்னை வாழும் நாட்கள் முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று..
//

இதை விட பெரிய வரம் ஏதும் தேவையில்லை..

குழந்தைங்கனாவே அழகு தான

Divya said...

Chanceless.............simply superbbbbbbbbb!!!

'ஸ்ருங்கார ' means what??
its a new word to me:)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Karthik Krishna said...

Hi Divya,
Thankx for yr coments...

Thankx mathuuuuuuuuuuuuuuu
mathu is right..

thats wat ஸ்ருங்காரம் means...

if say in another way...

u know..a girl make luk prity herself when she knwos ppl lukin at her...
and another way...
she does sum cute things whil her guy or any lovedones luk at her...
to make him pay attention on her...

for kidss..always there...
the cuteness...