Tuesday, January 13, 2009

துளசி...

என் வீட்டில் ஒரு அழகிய மாடம்
அதில் ஒரு தூய்மையான துளசிச்செடி...
என் பகலும் இரவும் அதனுடன்தான்...

மனதுக்கு இதமான கண்ணுக்கு பதுமையான
என்றும் பச்சை தோய்ந்த தோற்றம்...

என் ஸ்வாசம் நிறைக்கும் தூய்மை
என் கனவுலக தேவதை...
அவளின் ஸ்பரிஸம் தேடும் என் இதழ்கள்...

சிட்டி விளக்கொளியில் கண்சிமிட்டும்
என் இரவின் தேவதை அவள்...
இன்னும் சொன்னால்....
என் சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ளும்
என் தோழி...
என்னை பற்றி என்னை விட
அவளுக்கே நன்கு தெரியும்...
என் வீட்டு மஹாலக்ஷ்மி....
தென்றல் அவள் சுகந்தம் தாங்கி
என் வீடு நிறைக்கும்...

என் வாழ்வின் தவம்...
அந்த தூய துளசிசெடி....

பாவமறியா என் பச்சிளம்கண்டு....
இன்று பாழ்பட்டுப்போனதேனோ???
உயிர் நீர்வற்றி போனதாலோ...
பதில் சொல்வார் யாரோ???

மாடம் மட்டும் தனிமையில்...
இன்று வேர் அடி மண் சுமக்கிறது...

7 comments:

நட்புடன் ஜமால் said...

\\மாடம் மட்டும் தனிமையில்...
இன்று வேர் அடி மண் சுமக்கிறது...\\

மிக அழகான வரிகள் வலிகளோடு ...

புதியவன் said...

//தென்றல் அவள் சுகந்தம் தாங்கி
என் வீடு நிறைக்கும்...//

அழகு...அழகு...

கடைசிவரிகளில் வரிகளில் வலிகள்...

Divyapriya said...

y so much feelings? :)
நல்லா இருக்கு :))

Karthik Krishna said...

வாழ்த்துக்கு நன்றி ஜமால்...

Karthik Krishna said...

உண்மைகள் எபொழுதும் அழகுதானே புதியவன்.....

Karthik Krishna said...

வலி இலாமல் வாழ்க்கை இல்லை...
thankx priya..

Divya said...

வலிகளை ப்ரதிபலிக்கும் வரிகள்....அருமையான எழுத்துருவில்!