Wednesday, March 18, 2009

குருதிப்புனல்

பச்சைவயலாடி பகல் சாய
தாய்தேடி ஓடுமாம் பசுங்கன்று
உச்சிமுகர்ந்து உலகைமறந்து
உயிர்சுரந்து ஊட்டும் தாய்!!!

விலங்கிடை மாந்தர் புக்க
விலைபெறா உயிர்தின்னும்
விந்தைகள் காண்க!!!
நம்மண்ணில்...

பத்து மாதத்தின் தவம்...
பிரசவத்தின் வலி காணா பரவசம்
பரிசளிப்பிற்கான பறைசாற்றல்...

ஒளிதேடி உதைக்கும் ஓர் உயிர்
அந்த உயிர் காண ஏங்கும் தாய்

நமக்கு பிரசவங்கள் இலவசம்
வான்வழி ஏவிய கணைகளில்
நம்மை நாடிவரும் சேவைகள்


நம் அரசுக்கு கோடி நன்றிகள்...

கைமாறு தமிழன் பண்பாடு
ஆனால் எதுவுமில்லை எம்மிடம் இப்போ
எப்போதும் உங்கள் விருப்பம் போலவே
எம்முயிரை ஏற்றுக்கொள்க!!!


தாகம் தீரும்வரை பருகுங்கள்
சுவை சற்று வேறுதான்
வெறி தீரும்வரை தோயுங்கள்
நிறமும் சற்று வேறுதான்...

விருந்தோம்பல் எம் உடன்பிறப்பு...



( இலங்கை அரசின் தாக்குதலில் இறந்துபோன ஓர் கர்ப்பிணித்தாயும்
பிறந்தும் இறந்ததுமான ஓர் பச்சிளம்குழந்தையும்...)