Friday, January 16, 2009

சந்திப்பு....

நண்பா உன் முகவரி கூறு...

வான்மகள் காதல் கொண்டு
பூவுடல் சிலிர்க்க...
என்னை விழி வழி பெயர்த்தாள்..
மண் தொடும் யாத்திரையில் நான்...
சற்று இளைப்பாற...
புல்நுனியில் சிறு தூக்கம்...

நண்பா...
அவள் மோகம் தீர்க்க
என் குடில் புகுந்ததாள்..
இன்று நானும்...
உன்னைப்போலவே....
அனாதயாய்.....


கவலை வேண்டாம்....
சற்றுப் பொறுத்துக்கொள்...
அவள் காதலன் கண்திறக்கட்டும்...
என்னையும் மீண்டும் ஏற்றுக்கொள்வாள்...
உன் குடிலும் ஒளி பெறும்...

Thursday, January 15, 2009

வேல் விழியாள்...

கோடை கால வெப்பம் தணிக்க வந்து போன மழையின் ஈரம் காற்றுக்கு குளிர்மை தந்து அந்த மாலைப்பொழுதை மயக்கம் செய்தது...
நகரத்து மாட மாளிகைகள் சூழ ஓர் அழகிய கற்கோவில்,அருகே அழகிய ஒரு மணிமண்டபம்,அங்கு ஒரு விழா ஆயத்தம்,

உள்நுளையும் வாசலில் கால் வைக்கும்போது ஒரு இனம்புரியாத உணர்ச்சி,
வரவேற்ப்பு மாந்தர்களின் புன்னகை
கூடியிருந்த அறிந்தவரின் பேச்சு,ஆரம்பித்திருந்த ஒலிப்பேழையின் இசை,அங்குமிங்கும் ஓடி விளையாடிய குழந்தைகளின் ஆரவாரம்,
இவை அனைத்தயும் கலைத்து ஓர் உள்ளுணர்வு...
"அப்படி என்ன அதிசயம் நிகழப்போகிறதோ"

யாராவது என்னை அழைத்தார்களா?
இல்லயே....
யாரோ என்னை பிந்தொடர்ந்து வருவதுபோல ஓர் உணர்வு,

படிக்கட்டுகள் வழியாக...ஒரு உருவம்,
உருவம் அல்ல அது,ஒரு சிறு மின்னல் கீற்று...

மயில் தோகையே வடிவான பச்சைவண்ண்ணத்தில்
ஒரு பட்டாடை,
புள்ளிமான் வேகம் பெற்றுத்தாவும் சிறு ஆட்டுகுட்டியாய் ஒரு குறுகுறு நடை,அதிலும் ஒரு சிறு நெழிவு தாங்கி,
நீர் வகுத்த தீவுகளாய் பிரிந்தும் கூடியும் அந்த மென்னுடலை இரு சிறு தீவு செய்துநின்றது மெல்லிடை,
இந்த தீவுகூட்டத்தை இரு மெல்லிய தாமரை தண்டுகளாய் தாங்கிநின்றது அந்த வேகம் கொண்ட இரு பாதங்கள்...
மழையில் நனைந்து ஒதுங்கும் சிரு பூனைக்குட்டியின் பதுமை,
சற்றே காற்றில் பறந்த தாவணியை இழுத்து அந்த சிற்றிடையில் ஒரு சுற்று சுற்றி.....
வீற்றிருந்தாள் அழகி.....
தென்றலில் அலயாடும் தென்னம்கீற்றில் சந்திரனின் பொன்னொளி பட்டு அவற்றை பொன்னிறமாக்கும் மாயமாய்,அவளுக்கே சாமரம் செய்துநின்றது அந்த அழகிய கூந்தல்,சில குறும்பு முடிகளை இழுத்து சிறை செய்து,சிலவற்றை விடுமுறை செய்து பெண்கூந்தல் லட்சணம் கூறிநின்றாள் அந்த பூங்குழலி...

என்னை வெளியில் சிறைசெய்தாள்...

கார்மேகம் சூழ முழுமையான ஒளி துலங்கா முழுநிலவாய்...
அவ்விரு சிறு மடல் கவ்விநின்றிருந்தன அந்த இரு வாழ்விழியை...
மது உண்ட கருவண்டுகளாய் சுற்றிச்சுழன்றன அந்த இரு நயனங்கள்...

மழை இல்லை,ஆனால் ஒரு குளிர் காற்று,
மேகம் விலகுமுன்பே இடித்ததாய் அடித்துநின்றது என்இதயம்,
வேல்தாங்க சித்தம் கொண்டது நெஞ்சம்...
அழகிய சிரு மடல் விலக்கியது,
ஆயிரம் மின்னல் கீற்றுகளின் ஒளியாய் ஒரேநேரத்தில் என்னில் வீசினாள் அந்த வேல்களை...

Tuesday, January 13, 2009

துளசி...

என் வீட்டில் ஒரு அழகிய மாடம்
அதில் ஒரு தூய்மையான துளசிச்செடி...
என் பகலும் இரவும் அதனுடன்தான்...

மனதுக்கு இதமான கண்ணுக்கு பதுமையான
என்றும் பச்சை தோய்ந்த தோற்றம்...

என் ஸ்வாசம் நிறைக்கும் தூய்மை
என் கனவுலக தேவதை...
அவளின் ஸ்பரிஸம் தேடும் என் இதழ்கள்...

சிட்டி விளக்கொளியில் கண்சிமிட்டும்
என் இரவின் தேவதை அவள்...
இன்னும் சொன்னால்....
என் சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ளும்
என் தோழி...
என்னை பற்றி என்னை விட
அவளுக்கே நன்கு தெரியும்...
என் வீட்டு மஹாலக்ஷ்மி....
தென்றல் அவள் சுகந்தம் தாங்கி
என் வீடு நிறைக்கும்...

என் வாழ்வின் தவம்...
அந்த தூய துளசிசெடி....

பாவமறியா என் பச்சிளம்கண்டு....
இன்று பாழ்பட்டுப்போனதேனோ???
உயிர் நீர்வற்றி போனதாலோ...
பதில் சொல்வார் யாரோ???

மாடம் மட்டும் தனிமையில்...
இன்று வேர் அடி மண் சுமக்கிறது...